ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் – V கொவிட் தடுப்பூசிகள் முதல் மாத்திரைக்காக 50,000 தடுப்பூசிகளும் இரண்டாம் மாத்திரைக்காக 15,000 தடுப்பூசிகளும் அடுத்த வாரம் இலங்கைக்கு கிடைக்கப்பெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதனை ரஷ்யாவின் ஸ்புட்னிக் -V தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான கெமீலியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.