அத்தியாவசிய சேவைக்கு செல்லும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர்!

Date:

பயண கட்டுப்பாட்டுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைக்காக பயணிக்கும் வாகனங்களுக்கு நாளை முதல் விசேட ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள முழு காலப் பகுதிக்கும் இது செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய நாளைய தினம் அத்தியாவசிய சேவைக்காக கொழும்பிற்கு வரும் வாகனங்கள் ஓரிடத்தில் தகவல்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதால் தாமதம் ஏற்படக்கூடும்.

இது தொடர்பிலான ஏனைய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைக்காக செல்லும் நபர்கள் முகங்கொடுக்க வேண்டிய இன்னல்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த ஸ்டிக்கர் செய்முறை நாளை காலை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

Popular

More like this
Related

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...