கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் மரணித்த இலங்கையர்கள் தொடர்பான விபரம்

Date:

வெளிநாடுகளில் பணிபுரியும்  இலங்கையர்கள் கொரோனா தொற்று காரணமாக 142 பேர்  உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்த இலங்கைத் தொழிலாளர்கள் உயிழந்துள்ளதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை 4,800 க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டனர், அவர்களில் 4,600 பேர் குணமடைந்துள்ளனர்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத், ஓமான் மற்றும் கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கு உட்பட 16 நாடுகளில் இருந்து உயிரிழப்புகள் மற்றும் தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளன.

உயிரிழந்த அனைத்து இலங்கையர்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு பணிக்குச் சென்றதாக பணியக அதிகாரி தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...