இன்று 2,329 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

Date:

நாட்டில் மேலும் 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இன்றைய தினத்தில் இதுவரை 2,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 223,586 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,031 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 188,547 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,136 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...