கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த வாரம் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இரண்டு கோக்க கோலா போத்தல்களை நகர்த்துவதை சில ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருந்தது அனைவரும் அறிந்த விடயமே, தற்போது இன்ஸ்டாகிராமில் 300 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட உலகின் முதல் நபராக இருக்கின்றார். மார்ச் 2019 முதல் மார்ச் 2020 வரை ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் மூலம் 50 மில்லியனுக்கும் அதிகமான அமெர்க்க டொலர்களை சம்பாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரொனால்டோ 2012 ஒக்டோபரில் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தத் தொடங்கினார். தற்போது போர்த்துக்கல் தேசிய அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ சனிக்கிழமை (19) ஆம் திகதி ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.