மட்டக்களப்பு, செங்கலடி கருத்தப்பாலத்தில் இராணுவ வாகனம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளனத்தில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்தனர், மேலும் 04 பேர் காயமடைந்தனர். வாகரை இராணுவ முகாமிலிருந்து 06 பேருடன் பயணித்த இராணுவ வாகனம், செங்கலடி கருத்தப்பாலத்தில் விபத்திற்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே 02 இராணுவத்தினர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 04 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.