இலங்கையின் சமூகம், கலாச்சாரம், அரசியல் மற்றும் மதம் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர மஹிந்த தேரர் உதவினார் | எதிர்க்கட்சித் தலைவர்!

Date:

மஹிந்த தேரரின் இலங்கைக்கான வருகை உட்பட, புத்த சாசன வரலாற்றில் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்த நாளாக இன்றை (24) பொசன் பௌர்ணமி நாள் அமைகிறது.

புனித மஹிந்த தேரர் இலங்கைக்கு விஜயம் செய்த பின்னர், இரண்டாம் பாத்திஸ் மன்னர் உட்பட சுமார் 40,000 பேருக்கு சுல்லஹட்டிபோதாபம போதனை நிகழ்ந்ததும் இன்று போல ஒரு பொசன் பௌர்ணமி நாளிலாகும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொசன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த தேரரின் இலங்கை வருகை நிகழ்ந்த மகத்தான நிகழ்வும், தேவநம்பியதிஸ்ஸ மன்னருக்கு சுல்லஹதிபோதாபம போதனையை பிரசங்கித்ததும், மகாவம்சம் உள்ளிட்ட பௌத்த தர்ம புத்தகங்களை எழுதத் தொடங்கியதும் இதைப் போன்ற ஓர் பொசன் பௌர்ணமி நாளிலாகும்.
மேலும், இலங்கையின் சமூகம், கலாச்சாரம், அரசியல் மற்றும் மதம் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர மஹிந்த தேரர் உதவினார். ஒரு புதிய இலங்கை கலாச்சாரத்தின் தோற்றத்தில் அதன் தாக்கம் அற்பமானது அல்ல. நவீன இலங்கையில் பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச்சார மற்றும் சமூக சூழலுக்கான அடித்தளம் மஹிந்தவின் வருகையின் பின்னர் அமைக்கப்பட்டது. மஹிந்தவின் வருகைக்கு முன்பு, மரங்கள், கற்கள் போன்ற இயற்கை பொருட்களை வழிபட்டு வந்த மக்களுக்கு ஒரு அர்த்தமுள்ள கலாச்சாரமும் மதமும் கிடைத்தது அவரின் வருகையால் ஆகும்.
மனிதநேயம், இரக்கம், மற்றும் சமூக நீதிக்கு மஹிந்தவின் மூலம் கிடைத்த ஆதரவு அற்பமானது அல்ல.
மஹிந்தவின் வருகையின் மூலம்தான் இயற்கையோடு இணைந்த ஒரு பெரிய தர்மத்தால் நம் நாடு ஈர்க்கப்பட்டது.
சர்வ தர்ம மதம் என்பது முக்கால மதம் என்று அர்த்தப்படுகிறது, இது இயற்கையுடன் மிகவும் நெருக்கமானதும் நவீன காலங்களில் அதன் நித்தியத்தையும் பிரதிபலிக்கிறது.
அந்த மாபெரும் தர்மத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட அனைத்து பௌத்தர்களுக்கும் இனிய பொசன் தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு,இந்த புனிதமான பொசன் தின நாளில் உத்தம புத்தர் பிரசங்கித்த “உத்தனவத்தோ சதிமாதோ” என்ற நல்லொழுக்கத்தோடும் முயற்சியுடனும், நல்ல மனதுடனும் இந் நாளைக் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...