இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கான அனுமதிப்பத்திரத்தை இடை நிறுத்திய பஹ்ரைன்

Date:

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு புதிய வேலை வாய்ப்புக்களுக்கான அனுமதி பத்திரம் விநியோகிக்கும் செயற்பாட்டை பஹ்ரைன் அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

அந்நாட்டு மருத்துவ குழுவின் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் அடங்குகின்றன.கடந்த மே மாதம் 24ஆம் திகதி முதல் குறித்த நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் வருவதற்கு பஹ்ரைன் தடை விதித்துள்ளது.

மேலும், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் நீடிக்க பஹ்ரைன் மருத்துவ குழு அண்மையில் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...