கெனெசெட் சட்டமன்றில் 120 வாக்குகளில் 87வாக்குகளைப் பெற்று இஸ்ரேலின் பதினொறாவது ஜனாதிபதியாக இட்சாக் ஹெர்சாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஹெர்சக் 2003 முதல் 2018 வரையான காலப்பகுதியில் கெனசெட்டின் உறுப்பினராக பணியாற்றியதோடு , அந்தக் காலப்பகுதியில் நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் பதவி உட்பட பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.
வெற்றி பெறத் தேவையான 61 கெனெசெட் உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் ஹெர்சாக் 120 வாக்குகளில் 87 வாக்குகளைப் பெற்றார்.
இஸ்ரேலின் புதிய ஜனாதிபதிக்கு பிரதமர் நெதன்யாகு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.