எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு!

Date:

தீ விபத்திற்கு உள்ளான எக்ஸ்பிரஸ் கப்பலினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஏற்பட்ட நட்டத்தை முன்வைக்கும் கால எல்லை அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

reformsShmoj.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக அல்லது 0112 44 54 47 என்ற தொலை நகல் இலக்கத்தின் ஊடாக இதற்காக விண்ணப்பிக்க முடியும் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

ஏற்பட்டுள்ள இழப்புக்களுக்கு இடைக்கால நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கும், அனர்த்தத்திற்கு உள்ளான துறைகளுக்கும் உயர்ந்தபட்ச இழப்பீட்டை வழங்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து உப குழுக்களினதும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான நிபுணர்கள் நாட்டில் இல்லாததனால் வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 

குறிப்பிட்ட கப்பல் கம்பெனியிடமிருந்து கூறப்பட்டுள்ள இழப்பீட்டு தொகையின் முதலாவது தொகுதி வாழ்வாதாரத்தை இழந்து உள்ள மீனவர்களுக்கு வழங்கப்படும். படகு, வலை போன்ற உபகரணங்களுக்காக இழப்பீடு வழங்கப்படும் என ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...