9883 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜெயலத் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பு, பத்தலை , ஜா-எல மற்றும் கந்தானை உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
அதற்கமைய நீர்கொழும்பில் 6042 வத்தளையில் 1409 குடும்பங்களுக்கும் கந்தானையில் 233 குடும்பங்களுக்கும் சாலையைச் சேர்ந்த 69 மீனவ குடும்பங்களுக்கு 5000 ரூபா நட்டஈடு வழங்கப்பட உள்ளது.
இழப்பீட்டுகாக 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார். பிரதேச செயலாளர்களும் மாவட்ட நிர்வாகிகளும் இணைந்து கப்பலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.