எரிந்துப் போன எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் பணி ஆரம்பம்

Date:

தீயால் எரிந்துப் போன எம் வீ எக்ஸ் – பிரஸ் பேர்ல் (MV X-PRESS PEARL) கப்பலை ஆழ்கடலுக்கு இட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி நேற்று அறிவித்ததை தொடர்ந்து,கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சால்வர் குழுவுடன் இணைந்து இலங்கை கடற்படை குறித்த பணியை முன்னெடுத்துள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், குறித்த கப்பலில் இருந்து பெருமளவான எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், அவ்வாறு எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அதன் விளைவாக திக்வோவிட்ட பிரதேசம் முதல் நீர்கொழும்பு – கெபுன்கொட பிரதேசம் வரையிலான கடற்பகுதியில் எண்ணெய் படிமங்கள் மிதக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் தரையிறக்கம்

கொழும்பில் இருந்து இஸ்தான்புல் நோக்கிச் சென்ற துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் TK 733,...

அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை

கிழக்கிலிருந்தான ஒரு மாறுபடும் அலை காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு...

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழக்கு!

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி...

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை...