ஐ.நா. பொதுச்செயலாளராக மீண்டும் ஆன்டனியோ குட்டரெஸ்

Date:

போர்த்துக்கலின் முன்னாள் பிரதமரான அன்டனியோ குட்டரெஸ் (Antonio Guterres) ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது பொதுச்செயலாளராக கடந்த 2017-ம் ஆண்டு 1 திகதி முதல் பதவி வகித்து வருகிறார்.

மேலும், இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளரை தெரிவு செய்யும் பணிகள் நடந்து வந்தது.இந்நிலையில் நேற்று நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச்செயலாளராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளராக மீண்டும் 72 வயதான அன்டனியோ குட்டரெஸ் தெரிவாகிறார். எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும் ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தில் முறைப்படி அவர் தெரிவு செய்யப்படுவார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை தொடரவுள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்!

இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை...

நாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை.

இன்றையதினம் (11) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலினை சந்தித்தார் ரவூப் ஹக்கீம்

இந்தியாவின், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை, ஸ்ரீ லங்கா முஸ்லிம்...

தலாவ பகுதியில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 06 பேர் உயிரிழப்பு!

அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து...