வெல்லம்பிட்டிய பகுதியில் போதைப்பொருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஞ்சிபானை இம்ரானின் உதவியாளர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெல்லம்பிட்டிய, கொஹிலவத்த பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் 30 வயதுடையவர் எனவும், அவரிடமிருந்து 7 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.