கர்ப்பிணிகளுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்துகை வினைத்திறனற்றது – மகப்பேற்று வைத்தியர்கள் சங்கம் தெரிவிப்பு!

Date:

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு வினைத்திறனற்று இடம்பெறுவதாக மகப்பேற்று மற்றும் மகளிர் நோயியல் விசேட வைத்தியர்களின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

 

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.

 

இதன்போது பல்வேறு நோய் நிலைமைகள் தொடர்பில் அதிக ஆபத்துள்ளவர்களாக அடையாளம் காணப்படும் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமையளித்து தடுப்பூசி வழங்க முடிவெடுக்கப்பட்டது.

 

இதற்கமைய கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள், கடந்த 9 ஆம் திகதி முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டன.

 

தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களில், அவதானம் மிக்க நிலையில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதாக குடும்பநல சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள மகப்பேற்று மற்றும் மகளிர் நோயியல் விசேட வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா, குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 

இந்த மாதம் நிறைவடையும்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைய, தகைமைபெறும் அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை ஆரம்பித்திருக்க வேண்டும்.

 

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதியாகும்போது, தகைமையுடைய அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், இரண்டு கொவிட்-19 தடுப்பூசிகளையும் வழங்கி நிறைவுசெய்ய வேண்டும்.

 

இதனை செயற்படுத்த முடியாவிட்டால், தாங்கள் செயற்படுத்தித் தருவதாக மகப்பேற்று மற்றும் மகளிர் நோயியல் விசேட வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...

பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்காவிட்டால் அறிவியுங்கள்: போக்குவரத்து அதிகார சபை

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்றைய தினத்தில் 217 பேருந்துகள்...

உலக உணவு தினம்: உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவசாயத்தை ஊக்குவித்து வரும் சவூதி அரேபியா

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆண்டுதோரும்...