குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இணக்கம்

Date:

நாட்டின் குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தம்) சட்டமூலம் மற்றும் இலக்க சித்திரவதை மற்றும் வேறு கொடுரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சவமவாயம் (திருத்தம்) சட்டமூலம் ஆகியவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

நீதி அமைச்சர் எம்.யூ.எம்.அலி சப்ரி தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை  (22) நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் விசேட கூட்டத்திலேயே இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டது.

கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தம்) சட்டமூலம், 08.06.2021ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 1994ஆம் ஆண்டு 22ஆம் இலக்க சித்திரவதை மற்றும் வேறு கொடுரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சவமவாயம் (திருத்தம்) சட்டமூலம் மற்றும் ஒரு ஒழுங்குவிதி, நான்கு ஆண்டறிக்கைகள் என்பன இக்கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டன.

இவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க குழு இணங்கியது.  தற்பொழுது நிலவும் கொவிட்-19 தொற்றுநோய் சூழலின் கீழ் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அரசாங்க அதிகாரிகள் இக்கூட்டத்தில் ஒன்லைன் ஊடாக இணைந்துகொண்டனர்.

நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, சுசில் பிரேமஜயந்த பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்ஹ ஆகியோர் நேரடியாகக் கலந்துகொண்டிருந்தனர்.

விடியல் 

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...