கொரோனா தொற்று காரணமாக நாட்டில் மேலும் 52 பேர் பலி!

Date:

நேற்றைய தினம் (20) நாட்டில் மேலும் 52 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,633 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்று இதுவரை 1,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 241,420 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 207,287 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

2026 வரவு – செலவுத்திட்டம்: ஜனாதிபதி உரையின் முக்கிய விடயங்கள்!

ஒரு வளமான மற்றும் அழகான நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரின் ஆதரவையும் நாங்கள்...

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் பணிநீக்கம்!

சுமார் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட...

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி...

2026 வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றுக்கு

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு...