கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர்

Date:

அத்தியாவசிய தேவைகளுக்காக கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த ஸ்டிக்கர்கள் கம்பஹா, பாணந்துறை, நுகேகொடை, கல்கிஸ்ஸை மற்றும் வத்தளை ஆகிய இடங்களில் வைத்து ஒட்டப்படவுள்ளன. இவை ஒருநாள் மாத்திரமே செல்லுபடியாகும்.

ஒரே வாகனம் பலமுறை சோதனைக்கு உள்ளாக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று ஒட்டப்படும் ஸ்டிக்கர் இன்று மட்டும் செல்லுபடியாகும் என்பதோடு, நாளை வேறொரு ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றும் போலீஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், போலியான தகவல்களை வழங்குகின்றவர்களின் வாகனங்களுக்கு இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படாது என்றும் காவற்துறை ஊடகப்பேச்சாளர் எச்சரித்துள்ளார்.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...