கொவிட் மரணங்கள் நாளாந்த அறிக்கையில் ஏன் சேர்க்கப்படவில்லை-ரமேஷ் பத்திரனவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி!

Date:

தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாடு முழுவதும் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாக அமைச்சரவை இணை பேச்சாளரும், அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (8) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மிகவும் வெளிப்படையாக கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் வசிப்பவர்களுக்கு வழங்குவதற்கும், இலங்கை முழுவதும் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆரம்ப காலத்தில் இருந்த சில குறைபாடுகள் கூட இப்போது சுகாதாரத் துறை மற்றும் அரசாங்கத்தின் அனைத்து தரப்பினரின் தலையீட்டின் மூலமும் தீர்க்கப்படுகின்றன என்பதை குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொவிட் மரணங்கள் நாளாந்த அறிக்கையில் ஏன் சேர்க்கப்படவில்லை´ என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, ​​பல செய்தி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் மரண எண்ணிக்கையை கூடுதலாக மதிப்பிட்டுக் காட்டுகின்றனர்.

மேலும், அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல்களின் படி, கடந்த சில நாட்களாக நோயாளிகளின் இறப்பு குறித்த நாளாந்த அறிக்கை வந்துள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு இறப்பவர்களின் எண்ணிக்கை தனித்தனியாக வழங்கப்படுகிறது. சில சடலங்களின் பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளைப் பெற சில நாட்கள் ஆவதினாதால்,

 

அந்த விபரங்கள் சேர்க்கப்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டதே முக்கிய பிரச்சினை ஆகும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம் )

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...