சட்ட விரோத மணல் அகழ்விற்கு முடிவு கட்ட நடவடிக்கை!

Date:

அரியாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரியாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று (06) நேரடியாக சென்ற கடற்றொழில் அமைச்சர், சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள், பொலிஸார், படைத் தரப்பினர் மற்றும் பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.

பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இன்றைய விஜயம் அமைந்திருந்த நிலையில்,

சட்ட விரோத மணல் அகழ்வு முற்றாக கட்டுப்படுத்தப்பட வேண்டுமாயின், பாதுகாப்பு தரப்பினர் காவலரண்களை அமைத்து கண்காணிக்க வேண்டும் எனறு பிரதேச மக்களினால் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடிய அமைச்சர், அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்ட விரோத மணல் அகழ்வை முழுமையாகக் கட்டுப்படுத்துமாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

( அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...