சமூக , பொருளாதார வளர்ச்சியில் AUMSAவின் வகிபாகம்!!

Date:

வாழ்வில் பல கட்டங்களைத் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில் அழிக்கவே முடியாத சில தடயங்களை நிச்சயமாக நாம் விட்டுச் செல்ல வேண்டும். அப்படி பதிய வைப்பது தான் நம் திறமையின் அடையாளமாகும். அந்தவகையில் AUMSA வும் கடந்த காலங்களில் தன்னுடைய பல செயற்பாடுகளை வெற்றிகரமான தடயங்களாக பதியவைத்து வருகின்றது.

அவற்றுள் 1000 வீட்டுத் தோட்ட செயற்றிட்டமும் ஒன்றாகும்.நன்மையான காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்வது இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாகும். அந்தவகையில் இச் செயற்றிட்டத்தின் முக்கிய குறிக்கோளானது Covid-19 காலத்தில் மக்கள் முகம்கொடுக்கும் உணவுத் தட்டுப்பாட்டினால் ஏற்படும் சவால்களையும் மக்கள் அவற்றிலிருந்து மீண்டு வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சமூகத்திற்கு வழங்குதல்.

அல்லாஹ்வின் பேருதவியைக் கொண்டு இச் செயற்றிட்டமானது பல்வேறு படிமுறைகளைக் கொண்டதாக சிறப்பாக திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டது. அவற்றில் முதலாவதாக நாடு பூராகவும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் Google விண்ணப்பப் படிவம் ஒன்று விநியோகிக்கப்பட்டு அவற்றை பூர்த்தி செய்ததன் அடிப்படையில் வீட்டுத் தோட்டத்தில் தன்னார்வமுள்ள மாணவர்கள் இனங்காணப்பட்டனர். பின் அவர்களை கொண்ட வட்சப் மூலமான குழுக்கள் அமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 1000 வீட்டுத்தோட்டம் எனும் இச் செயற்றிட்டத்தினை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி தெளிவு படுத்தும் முகமாக இச் செயற்றிட்டம் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய ஒரு அறிமுக காணொளி உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இக்காணொளி எம்மால் உருவாக்கப்பட்ட மாணவ குழுக்களின் உதவியுடன் உரிய மக்களை சென்றடைந்தது.

அடுத்ததாக மேலும் வீட்டுத்தோட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதற்குத் தேவையான ஆலோசனைகளையும் விளக்கங்களையும் உள்ளடக்கிய பல முக்கிய தகவல்களைக்கொண்ட வழிகாட்டல் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இவ் வீட்டுத்தோட்ட வழிகாட்டி ஆவணமானது பிரதேசத்தில் காணப்படும் விவசாயிகளின் உதவியுடன் பாகம்-1, பாகம்-2 என இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டன. குறிப்பாக இரண்டாவது கையேடானது வீட்டுத்தோட்ட மரக்கறிகள் மற்றும் பழ பயிர்ச்செய்கை சம்பந்தமான விடயங்களை உள்ளடக்கிய ஆவணமாக அமையப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இறைவனின் துணையால் பாரியளவு மாணவர்களும் சாதாரண மக்களும் எம்மோடு இச்செயற்றிட்டத்தில் கைகோர்த்தனர். அவ்வாறு இணைந்து கொண்டவர்களிடம் இருந்து அவர்கள் மேற்கொண்ட வீட்டுத்தோட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் ஏனைய தேவையான மேலதிக தகவல்களும் ஒன்று திரட்டப்பட்டன. இந்தத் தகவல்களைக்

கொண்டு இச்செயற்றிட்டத்தின் உள்ளடக்கங்களைக் கொண்ட காணொளியும் அறிக்கையும் எமது உத்தியோக பூர்வ முகநூல் பகுதியில் வெளியிடப்பட்டது.

மேலும் சமூகத்தில் நல்லதொரு ஊக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில் பயிர்களை விநியோகம் செய்யும் செயற்றிட்டமும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதாவது சமய வழிபாட்டுத் தலங்கள், அநாதை இல்லங்கள், பாடசாலைகள் மேலும் பல பொது முக்கிய ஸ்தலங்களுக்கு எம்மால் பல மரக்கன்றுகள் மற்றும் பயிர்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் உதவியால் இச் செயற் திட்டத்தின் முலம் 1000 இற்கும் மேற்பட்ட வீட்டுத்தோட்டங்கள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் மூலம் சமூக மட்டத்தில் சிறிய வருமானம் ஈட்டுதல் போன்ற இன்னும் பல சிறந்த பயன்களை மக்கள் பெற்றுக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செயற்றிட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் எம்.எச்.எம். ஹம்மாட், இவர் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பயிற்சி நெறியை தொடரும் மாணவராவார். இவர் AUMSA வின் உதவி செயலாளராகவும் செயற்படுகின்றார். மற்றும் இவரோடு இணைந்து இச் செயற்றிட்டத்தை வழிநடத்தியவர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஹம்னா இக்பால். இவர் AUMSA வின் கிழக்கு வலய ஊடக ஒருங்கிணைப்பாளராக செயற்படுகின்றார்.

அல்லாஹ் எமக்கு வழங்கிய இளமையையும் ஓய்வையும் அவன் தந்த அறிவு ஞானத்தைக்கொண்டு

நல்ல முறையில் பிரயோகப்படுத்தி AUMSA வும் தன்னால் இயன்றளவு சமுகத்திற்கு வழிகாட்டி சேவை செய்தது என்பதில் மனநிறைவு பெறுகின்றோம்.

 

 

ஜாஸிரா ஜுனைதீன் 

கொழும்பு பல்கலைக்கழகம்.

AUMSAவின் தொண்டர் குழு அங்கத்தவர்

Popular

More like this
Related

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...

டயானா கமகேவுக்கு நீதிமன்றம் பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

எதிர்வரும் நாட்களில் வானிலையில் மாற்றம்!

எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மாலை...