நுகர்வுக்கு பொருத்தமற்ற மீன்கள் சந்தைக்கு வராது!

Date:

எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலினால் பாதிக்கப்புக்குள்ளான கடல் பிரதேசத்தில் உள்ள மீன்களின் உடல்களில் தீங்கு விளைவிக்கும் பொருள்கள் இருப்பது இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த கடல் பிரதேசத்தில் மீன்ப்பிடி நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வுக்கு பொருத்தமற்ற மீன்கள் சந்தைக்கு வராது என்றும் அவர் கூறினார்.

மேலும், பயண கட்டுப்பாடு விதித்திருந்தாலும் நடமாடும் வாகன வியாபாரிகளினால் மீன் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

இதேவேளை, இலங்கையின் மீன்வளம் மற்றும் கடற்கரை உட்பட கடல் பகுதியின் நீண்டகால விளைவுகள் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் கடல்சார் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...