நெருங்கிய குடும்பத்தாரின் இறுதிச் சடங்குகளில் மாத்திரம் கலந்து கொள்ள மாகாண எல்லைகளை கடக்க அனுமதி

Date:

நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியசேவைகளில் ஈடுபடுவோரை தவிர, ஏனையோருக்கு மாகாண எல்லைகளை கடக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

என்றாலும் நெருங்கி உறவினர்களின் சடங்குகளில் கலந்துக்கொள்வதற்கு மாத்திரம் மாகாண எல்லையை கடக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும்  அவர் தெரிவித்தார்.

எனினும், சோதனை சாவடிகளில் அதற்குரிய சரியான ஆவணங்களை சமர்ப்பிப்பது அத்தியாவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதைவிடுத்து, பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் மாகாண எல்லையை கடக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...