நான் மரணிக்கின்ற தினத்தன்று என்னால் எதிர்கால சந்ததிக்கு சிறந்த உதாரணமாக விளங்கமுடியுமென்றால் என் மகிழ்ச்சி அவ்வளவு அளவிடமுடியாததாகயிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு முகநூலில் தனது கருத்தினை பதிவிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
எனக்கு தற்போது எழுபத்தாறுவயது.எழுபத்தாறு வருடங்களின் முன்னர் நான் இந்த உலகிற்கு தனியாகவே வந்தேன்.நான் மாத்திரமல்ல அனைவரும் தனியாகவே வந்தோம்.
ஒருநாள் நான் வெறுங்கையுடன் தனியே போகநேரிடும்.
ஆனால் இந்தஉலகிலிருந்து விடைபெறும் நாள் அன்று நாங்கள் இன்னொரு பொருளை எடுத்துச்செல்கின்றோம்,அது எங்கள் வாழ்க்கையில் நாங்கள் செய்த விடயங்களிற்கு ஏற்ப எமக்கு கிடைக்கின்ற நற்பெயர் அல்லது மோசமான பெயர்.
இந்த யதார்த்தத்தை நான் சிறுவயது முதல் உணர்ந்துள்ளேன். உலகில் எங்கள் வாழ்க்கை காலத்தில் நாங்கள் நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கி உலகை சிறந்த இடமாக மாற்றவேண்டும்.
எனது வாழ்நாள் முழுவதும் என்னால் முடிந்தளவிற்கு அந்த கடமையை நிறைவேற்ற முயன்றுள்ளேன்.
எனது வாழ்நாளில் நான் எனது தேசத்திற்கும் மக்களிற்கும்உலகிற்கும் எதனையாவது செய்திருப்பேன் என்றால் உலகை சிறந்ததாக மாற்றுவதற்காகவே நான் அதனை செய்தேன்.
நான் மரணிக்கின்ற தினத்தன்று என்னால் எதிர்கால சந்ததிக்கு சிறந்த உதாரணமாக விளங்கமுடியுமென்றால் என் மகிழ்ச்சி அவ்வளவு அளவிடமுடியாததாகயிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.