மது அருந்தும் சிறுவனின் காணொளி தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகள் ஆரம்பம்

Date:

மது அருந்தும் சிறுவனின் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில் அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பேலியகொட, நுகே வீதியை சேர்ந்த 04 வயது சிறுவன், குறித்த வீடியோவில் உள்ளதாக பின்னர் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் , குறித்த வீடியோவை எடுத்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சட்டத்துக்கு அமைய சிறுவர்களுக்கு மதுபானம், புகைத்தல் பொருட்கள் உள்ளிட்டவைற்றை பெற்றுக்கொடுப்பது, வழங்குவது பாரிய குற்றம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கைதுசெய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேக நபர் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...