மூன்று மாவட்டங்களின் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்!

Date:

நாட்டின் 3 மாவட்டங்களுக்கு உட்பட்ட மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

அதனடிப்படையில் கொழும்பு – தலங்கம் தலாஹேன தெற்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட விஜயமாவத்தை, ஜயகத் மாவத்தை பகுதிகளும், தலாஹேன வடக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஜயகத் மாவத்தை, சத்சர மாவத்தை, சமனல மாவத்தை, அஞ்சல் பெட்டி சந்தி ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் நாவலப்பிட்டி காவற்துறை பிரிவுக்குட்பட்ட கெட்டபுலா மத்திய பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதுதவிர, இரத்தினபுரி மாவட்டத்தின் கஹன்கம கொஸ்கல தோட்டம் மற்றும் போபெத்த பகுதி என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...