அசேல சம்பத் கைதுக்கு காரணம் வெளியானது!

Date:

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகி உள்ளது.

இவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான செய்தி ஒன்றை பதிவிட்டமை தொடர்பில் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அவரிடம் விசாரணைகள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எக்ஸ்ட்ரா செனொகா கொவிட் தடுப்பூசியை இலங்கைக்கு எடுத்து வந்து அதில் சில தரமற்ற திரவங்களை கலந்ததன் பின்னர் மக்களுக்கு செலுத்துவதாக அவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான செய்தி ஒன்றைப் பரப்பியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பிலியந்தல பகுதியில் வைத்து நேற்று (25) இரவு அசேல சம்பத் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...