அனுமதியின்றி செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மேல்மாகாண வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Date:

மேல் மாகாணத்தில் வர்த்தகர்கள், பொது மக்களை அனுமதியின்றி செயற்பட வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.

மேல் மாகாணத்தில் அனுமதியின்றி செயற்பட்ட திரையரங்குகள், உணவகங்கள், நீச்சல் தடாகங்கள், உள்ளிட்ட 313 இடங்கள் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது 605 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

காவல்துறையின் அனுமதியின்றி செயற்படுவோருக்கும்,சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறுவோருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

குறிப்பாக வர்த்தகர்கள், திரையரங்குகள்,விடுதிகள் என்பன சுகாதார துறையினரால் விடுக்கப்படும் அறிவித்தல்களுக்கு ஏற்பட செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நடமாட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கூட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. குறிப்பாக மேல் மாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.

எனவே பொதுமக்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற மறக்க வேண்டாம் என காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...