நெருக்கடியான நேரத்தில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கான பொறுப்பினை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிப்பொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பை அமைச்சர் உதய கம்மன்பில ஏற்றுக்கொண்டு, அவர் அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.