இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை!

Date:

நாட்டில் இதுவரை 2,199,504 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினத்தில் (11) மாத்திரம் 42,569 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 1,209,276 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 45,580 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 184 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 355,177 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 64,986 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...