1978 ஆம் ஆண்டில் இலங்கையில் உருவாக்கப்பட்ட நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே, அப்போதிலிருந்து தற்போதுவரை நாட்டில் இடம்பெற்றுவரும் பல்வேறு தீமைகளுக்கும் அடிப்படையாகும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சாடியிருக்கிறார்.
மேலும் இது தொடர்பில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 1978 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே, அப்போதிலிருந்து தற்போதுவரை நாட்டில் இடம்பெற்றுவரும் பல்வேறு தீமைகளுக்கும் அடிப்படையாகும். சட்டத்தின் ஆட்சியை மையமாகக்கொண்டு செயற்படும் ஜனநாயக நாடாக இலங்கை இருக்க வேண்டுமானால், முதலில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும். அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், தான் தெரிவாகி 6 மாதகாலத்துக்குள் எந்தப் பதவிக்காகப் போட்டியிடுகின்றாரோ அந்தப் பதவியை ஒழிப்பதாக வாக்குறுதியளிக்க வேண்டும்.
மேலும் இது தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படாத பல விசேட நிபுணர்குழுவின் அறிக்கைகளின் ஊடாகவே நரகத்தை நோக்கிய இலங்கையின் பாதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறைமையை ஒழிப்பதற்கு அரசியல் ரீதியான ஏற்புடைமையே அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
The executive Presidential system is the fountain of most evils in this country since it was established in 1978. It must go, if we are to be a modern democracy based on the rule of law.
— Mangala Samaraweera (@MangalaLK) June 24, 2021