நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், இன்று(21) காலை 9 மணி முதல் அனைத்து மதுபானசாலைகளையும் திறக்க கலால் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருந்த காலப்பகுதியில், மதுபானசாலைகளில் மதுபானங்கள் களவாக விற்பனை செய்யப்பட்டதாகக் கிடைத்த தகவல்களை அடுத்தே, சகல
மதுபானசாலைகளின் பூட்டுகளுக்கும் சீல் வைக்கப்பட்டன.
மதுபானசாலைகள் மூடப்பட்ட காலப்பகுதியில், அரசாங்கத்துக்கு 2 பில்லியன் ரூபாய் ( 2,000கோடி) நட்டம் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.