மூழ்கிய எக்ஸ்-பிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலின் விளைவுகள் காரணமாக இலங்கைக் கரையில் ஒதுங்கிங்கிய இறந்த கடல் வாழ் உயிரினங்களுக்கு இழப்பீடு கோருவது தொடர்பாக சட்டரீதியான விருப்பங்களை ஆராய இலங்கையின் வனவிலங்கு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
வனவிலங்கு அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபதிரண ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், எக்ஸ்-பிரஸ் பேர்ல் மாமி அவர்கள் மீது, விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டங்களின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கடந்த இரண்டு வாரங்களில், 31 க்கும் மேற்பட்ட இறந்த கடல் ஆமைகள் மற்றும் 05 டால்பின்கள் இலங்கைக் கரைப் பகுதியில் ஒதுங்கியுள்ளன.