இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக ஒருவர் சுட்டுக்கொலை!

Date:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இன்று மாலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.இன்று மாலை மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டுற்கு முன்பாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டபோது மெய்பாதுகாவலரால் துப்பாக்கிய பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மெய்பாதுகாவலரின் துப்பாக்கியையும் பறிக்க முயன்ற நிலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் டி.ஜி.என்.விஜயசேன உட்பட பொலிஸ் குழுக்கள் இது தொடர்பான விசாரைணைகளை முன்னெடுத்துவருகின்றது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...