மாவட்ட மருத்துவமனை தொம்பே, COVID – 19 இடைநிலை சிகிச்சை மையத்திற்கு நெபுலைசர்கள்,
வெப்பமானிகள், சானிட்டைசர் நானோ ஸ்ப்ரே கருவி மற்றும் மெத்தைகள் அன்பளிப்பு செய்தல்.
லெபனான் மற்றும் சிரியாவுக்கான இலங்கை தூதரகத்தினால் நெபுலைசர்கள், உடல் வெப்பமானிகள்,
சானிட்டைசர் நானோ ஸ்ப்ரே கருவி, மெத்தை மற்றும் மாற்று கொசு வலைகளை புதிதாக நிறுவப்பட்ட 300
கட்டில்களை கொண்ட இடைநிலை கோவிட் -19 சிகிச்சை மையத்திற்கு வழங்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை இலங்கை தூதரகத்திற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின்,
தேசிய மகளிர் குழுவின் தலைவி திருமதி. ஷிரந்தி பீட்ரிஸ் திசானாயகா முன்வைத்தார்.
இந்த நன்கொடை தூதுவர் திருமதி. ஷானி கல்யாணரத்ன கருணாரத்ன, இரண்டாம் செயலாளர்
(தொழிலாளர்) திரு. டி. லக்ஸ்மிதரன், மற்றும் தூதரகப் பணியாளர்கள், சிரியா நாட்டுக்கான இலங்கையின்
கௌரவ கொன்சல் திரு. Dr. Mhd Moussallam Al Droubi, ரத்னதீப சர்வதேச புலம்பெயர்ந்தோர்
குழுவின் தலைவி குசும் கொடிக்கார மற்றும் தொழில் முயற்சியாளர் திருமதி. மல்கந்தி சில்வா ஆகியோரின்
தனிப்பட்ட பங்களிப்புகளால் இன் நன்கொடை வழங்கப்பட்டது.
இன் நன்கொடைகளை வழங்கும் செயற்பாடு வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் (நிர்வாகம்)
திரு எச்.ஏ.எஸ்.பெர்னாண்டோ அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
ஏலவே, இதே நன்கொடையாளர்கலினால் இம் மருத்துவமனைக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் (Pulse
Oximeters) வழங்கினர்.