உப பொலிஸ் பரிசோதகரை தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவு!

Date:

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரை விசாரணைகள் நிறைவடையும் வரையில் தடுப்புக்காவலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

 

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 50 கிலோ கிராம் ஹெரோயின் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

 

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை குறித்த உப பொலிஸ் பரிசோதகர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...