கடந்த ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மதிப்பீட்டை மீள் திருத்தும் விண்ணப்பங்களை ஒன்லைன் மூலமாக மாத்திரம் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவிக்கையில், இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரையில் இவ்வாறு விண்ணப்பிக்க முடியும், மேலும் பாடசாலை விண்ணப்பதரிக்கு அதிபரின் பரிந்துரை அவசியமற்றது எனவும் தெரிவித்தார்.
மேலுள்ள பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இணையதளத்தின் ஊடாக விண்ணப்பிக்கலாம்.