பேராசிரியர் கத்ரி இஸ்மாயில் கடந்த இரண்டாம் திகதி அமெரிக்காவில் வபாத்தாகினார்.பேராசிரியர் கத்ரி இஸ்மாயில் 1980 காலப்பகுதியில் ஆங்கில ஊடகத்துறையில் மிகவும் பிரபலம் பெற்று விளங்கினார்.கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ், தி ஐலண்ட் போன்ற பத்திரிகைகளில் தரமான ஆக்க எழுத்தாளராக இருந்து பல வாசகர்களின் ஈர்ப்பை பெற்ற ஒருவராவார்.
காலியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் உலகின் மிகச் சிறந்த ஊடகவியலாளராக மதிக்கப்பட்டார்.இலங்கையின் முஸ்லிம் சமூகத்திலிருந்து உருவான அரிதான அறிவாளுமைகளுள் இவரும் ஒருவராவார்.அவருடைய ஆக்கங்கள் ஆங்கிலத்தில் பெரிதும் எழுதப்பட்டுள்ளது அவை தமிழாக்கம் செய்யப்படாததால் முஸ்லிம் சமூகத்தில் பெரிதளவில் அறிமுகம் இல்லாத ஒருவரானார்.
ஊடகப் பணியிலிருந்து விலகிய அவர் பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து அங்குள்ள மின்சொட்டா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணிபுரிந்தார்.ஆழமான பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவராவார்.அவற்றில் unmooring identity என்பது அபூர்வமான ஆய்வுக் கட்டுரையாக பார்க்கப்படுகின்றது .