எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் உட்பட மூவருக்கு நாட்டிலிருந்து வௌியேற தடை!

Date:

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கெப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும் துணை தலைமை பொறியியலாளர் ஆகியோருக்கு இலங்கையில் இருந்து வௌியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பாக முன்னி​லையான பிரதி சொலிசிட்டர் நாயகம் மாதவ தென்னகோன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

பிரதி சொலிசிட்டர் நாயகம் சமர்ப்பித்த ஆவணங்களை ஆராய்ந்த மேலதிக நீதவான் சந்தேகநபர்களான கப்பலின் கெப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும் துணை தலைமை பொறியியலாளர் ஆகியோரை எதிர்வரும் 07 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...