கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பிற்கான நஷ்டஈட்டை செலுத்தும் நடவடிக்கையை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக கப்பலின் உரிமையாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
40 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்ட ஈட்டை கோரியுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் குழு தெரிவித்துள்ளது, இது தொடர்பில் ஆராய்ந்த பின்னர் விரைவில் நஷ்ட ஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமையாளர் நிறுவனம் அறிவித்துள்ளது.
கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதா என்பது தொடர்பில் நேற்று மீண்டும் ஆராய்ந்துள்ளனர்.கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கும் அந்தப் பிராந்தியத்தில் இருந்து நீர் மாதிரிகள் பெறப்பட்டு விரைவில் பரிசோதனைகளை ஆரம்பிக்க உள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட எம்பிரஸ் பேர்ல் கப்பலின் கேப்டனுக்கு பிணை வழங்கப்பட்டது. 20 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கு பிரதான மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது இதைவிட எக்ஸ்பிரஸ் தீப்பற்றியதன் காரணமாக சந்தேகிக்கப்படும் 31 க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் கிடைத்துள்ளதாக வன ஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது அதில் இருந்து ஐந்து டொல்பின்களின் உடல்களும் கரையொதுங்கிஇருந்ததாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.