தீயால் எரிந்துப் போன எம் வீ எக்ஸ் – பிரஸ் பேர்ல் (MV X-PRESS PEARL) கப்பலை ஆழ்கடலுக்கு இட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி நேற்று அறிவித்ததை தொடர்ந்து,கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சால்வர் குழுவுடன் இணைந்து இலங்கை கடற்படை குறித்த பணியை முன்னெடுத்துள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், குறித்த கப்பலில் இருந்து பெருமளவான எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், அவ்வாறு எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அதன் விளைவாக திக்வோவிட்ட பிரதேசம் முதல் நீர்கொழும்பு – கெபுன்கொட பிரதேசம் வரையிலான கடற்பகுதியில் எண்ணெய் படிமங்கள் மிதக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.