எரிபொருள் விலைகள் மீண்டும் திருத்தம்??

Date:

அதிகரித்த எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்வது தொடர்பில் நாளைய தினம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக பல்வேறுபட்ட தரப்பினரால் முன்வைக்கப்படும் எதிர்ப்புகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அமைச்சரவை நாளை (14) பிற்பகல் 5 மணியளவில் ஒன்றுகூடவுள்ளது.கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

 

இதன்படி, 92 ரக ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 20 ரூபாவினாலும், 95 ரக ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 23 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டன.

 

எனினும், அதிகரித்த எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆளும் தரப்பு சார்பிலே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

 

இவ்வாறான பின்னணியில் கனிய எண்ணெய் அமைச்சில் விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.

 

இந்நிலையில், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சகல கருத்துக்களும் நாளை (14) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது கவனத்தில் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...