போர்த்துக்கலின் முன்னாள் பிரதமரான அன்டனியோ குட்டரெஸ் (Antonio Guterres) ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது பொதுச்செயலாளராக கடந்த 2017-ம் ஆண்டு 1 திகதி முதல் பதவி வகித்து வருகிறார்.
மேலும், இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளரை தெரிவு செய்யும் பணிகள் நடந்து வந்தது.இந்நிலையில் நேற்று நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச்செயலாளராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளராக மீண்டும் 72 வயதான அன்டனியோ குட்டரெஸ் தெரிவாகிறார். எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும் ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தில் முறைப்படி அவர் தெரிவு செய்யப்படுவார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை தொடரவுள்ளது.