இலங்கை கடற்பரப்பில் பற்றி எரிந்த எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் கப்பல் மூழ்கும் அபாயம் ஏற்பட்டால் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்க அவசர உதவி கோரப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் இந்த அவசர உதவி கோரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.