கட்டாரிலுள்ள இலங்கையர்களால் ஒரு தொகுதி சிலிண்டர்கள் அன்பளிப்பு!

Date:

அக்கரைப்பற்று இளைஞர்களால் கட்டார் தூதுவரிடம் கையளிப்பு

கட்டாரில் இயங்கிவரும் இலங்கை முஸ்லிம் சம்மேளனத்தின் (FSMA – Q) அங்கத்துவ அமைப்புக்களின் நிதியுதவியுடன் இலங்கை அரசாங்கத்திற்கு 60 ஒட்சிசன் சிலிண்டர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

நேற்றைய முன் தினம் (11) கட்டாரிலுள்ள இலங்கை முஸ்லிம் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Sri Lankan Muslim Association – FSMA) கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகத்திடம் கையளித்தது.

இமனித நேய உதவியானது Akkaraipattu Community Qatar (AKPCQ) இன் உயடர்பீட உறுப்பினர்களால் பங்களிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் FSMA இனது தலைவர் றினோஸ் மற்றும் AKPCQ இனது நடப்பாண்டுக்கான தலைவர் ரிபாஸ் அபூதாலிப் ஆகியோர், இலங்கைக்கான கட்டார் தூதுவர், மொஹமட் மபாஸ் மொஹிடீனிடம் குறித்த பொருட் தொகுதிகளை கையளித்தனர்.

இலங்கை தூதரகத்தினால் குறித்த 60 ஒட்சிசன் சிலிண்டர்களும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்காக பல அர்ப்பணிப்பு களையும் தியாகங்களையும் செய்த அனைவருக்கும் தாமும் அதேபோல் தூதரகம் சார்பாகவும் மனப்பூர்வமாக நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக கட்டாருக்கான இலங்கை தூதுவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் இலங்கை முஸ்லிம்களின் சம்மேளனத்தின் தலைவர் முஹமட் ரினோஸ் ஸாலிஹீன் தெரிவிக்கையில், இந்த திட்டத்தை மிகவும் துரித கதியில் அதேநேரம் வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு ஆதரவு மற்றும் பங்களிப்பு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை அனர்த்தங்களின் போதும் இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கட்டார் சம்மேளனம் பல்வேறு சமூகப் பணிகளை இலங்கையில் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...