நேற்றைய தினம் நாட்டில் 2,789 கொவிட் 19 தொற்றாளர்கள் பதிவாகி இருந்த நிலையில், அதில் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்தில் இருந்து பதிவாகி இருந்தனர்.
மேலும், நேற்றைய தொற்றாளர்களில் 30 பேர் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்களாவர்.
அதேபோல், நேற்றைய தினம் 25 மாவட்டங்களிலும் இருந்து கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 6 மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 741 தொற்றாளர்களும், கொழும்பில் 505 பேரும் மற்றும் களுத்துறையில் 181 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், குருணாகலையில் 145 பேரும், காலியில் 67 பேரும், மாத்தறையில் 40 பேரும், கேகாலையில் 50 பேரும், பதுளையில் 96 பேரும், அம்பாறையில் 66 பேரும், மாத்தளையில் 18 பேரும், அனுராதபுரத்தில் 57 பேரும், முல்லைத்தீவில் 3 பேரும், மன்னாரில் 9 பேரும், வவுனியாவில் 35 பேரும், திருகோணமலையில் 6 பேரும், நுவரெலியாவில் 45 பேரும், கண்டியில் 101 பேரும், இரத்தினபுரியில் 397 பேரும், புத்தளத்தில் 29 பேரும், யாழ்ப்பாணத்தில் 60 பேரும், கிளிநொச்சியில் 8 பேரும், பொலன்னறுவையில் 8 பேரும், மொணராகலையில் 19 பேரும் மற்றும் மட்டக்களப்பில் 67 பேரும் பதிவாகியுள்ளனர்.