எரிவாயு விலையை தீர்மானிப்பது தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினர் பதவியை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இராஜினாமா செய்துள்ளார்.
எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பான தீர்மானமெடுக்கும் குழுவில் பங்கேற்றால் அரசுக்குள் இருக்கும் பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகவேண்டிவருமென கருதியே அவர் இந்த உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அரசின் பொதுத் தீர்மானத்திற்கமைய எரிபொருள் விலைகளை அதிகரித்தாலும் அரசின் உறுப்பினர்களே அதனை விமர்சனம் செய்துள்ளதால் அதிருப்தியடைந்து இந்த முடிவை அமைச்சர் கம்மன்பில எடுத்துள்ளமை ஆளுங்கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ச அமைச்சராக நியமனம் பெறவுள்ளாரென செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் கம்மன்பில இந்த இராஜினாமாவை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.