கர்ப்பிணிகளுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்துகை வினைத்திறனற்றது – மகப்பேற்று வைத்தியர்கள் சங்கம் தெரிவிப்பு!

Date:

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு வினைத்திறனற்று இடம்பெறுவதாக மகப்பேற்று மற்றும் மகளிர் நோயியல் விசேட வைத்தியர்களின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

 

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.

 

இதன்போது பல்வேறு நோய் நிலைமைகள் தொடர்பில் அதிக ஆபத்துள்ளவர்களாக அடையாளம் காணப்படும் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமையளித்து தடுப்பூசி வழங்க முடிவெடுக்கப்பட்டது.

 

இதற்கமைய கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள், கடந்த 9 ஆம் திகதி முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டன.

 

தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களில், அவதானம் மிக்க நிலையில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதாக குடும்பநல சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள மகப்பேற்று மற்றும் மகளிர் நோயியல் விசேட வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா, குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 

இந்த மாதம் நிறைவடையும்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைய, தகைமைபெறும் அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை ஆரம்பித்திருக்க வேண்டும்.

 

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதியாகும்போது, தகைமையுடைய அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், இரண்டு கொவிட்-19 தடுப்பூசிகளையும் வழங்கி நிறைவுசெய்ய வேண்டும்.

 

இதனை செயற்படுத்த முடியாவிட்டால், தாங்கள் செயற்படுத்தித் தருவதாக மகப்பேற்று மற்றும் மகளிர் நோயியல் விசேட வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...