வெலிமட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொரகஸ் ஹுலங்கபொல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் 40 கொவிட் 19 தொற்றாளர்கள் பதிவாகி உள்ளனர்.
கடந்த தினம் பதிவான தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேரும் மற்றும் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 10 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த நோயாளர்கள் அனைவரையும் இடைநிலை சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
ஒரே சந்தர்ப்பத்தில் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ள காரணத்தால் பிரதேசத்தின் அனைத்து விற்பனை நிலையங்களையும் மூட பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள கினிகத்ஹேன கடவல தோட்டத்தில் புதிதாக 24 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதேபோல், அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்று 47 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர்.
80 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் பதிவானதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.