குடும்பத்தினர்,சட்டத்தரணிகளுக்கு அறிவிக்காமல் கவிஞர் அஹ்னாப் ஜசீமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்!

Date:

அஹ்னாப் ஜசீமின் சட்டத்தரணிகள் அவரது குடும்பத்தார் மற்றும் சட்டத்தரணிகளுக்கு அறிவிக்காமல் அவர் கடந்த வாரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:அவருக்குச் சார்பாக வாதங்களை முன்வைப்பதைத் தடுக்கும் நோக்கில்,ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜசீம் என்பவர் எவ்வித குற்றச்சாட்டுக்களும் ஏற்றுக் கொள்ளத் தகுந்த ஆதாரங்களுமின்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சுமார் 400 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார். அவரது உடல் நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் மிக மோசமாகவும்

மனிதாபிமானமற்ற விதத்திலும் அஹ்னாப் ஜசீம் நடத்தப்பட்டிருக்கிறார். இக்காலப் பகுதியில் அவரை வற்புறுத்தி பொய்யான வாக்குமூலத்தைப் பெறுவதற்கும் அதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.அஹ்னாப் ஜசீம்

கைதுசெய்யப்பட்டதிலிருந்து சுமார் 10 மாதங்கள் வரையில் சட்ட உதவியை நாடுவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. அதன் பின்னர் சட்ட உதவியைப் பெறுவதற்கு அனுமதியளிக்கப்பட்டபோதிலும்

அவருக்கும் அவரது சட்டத்தரணிக்கும் இடையிலான கலந்துரையாடல் அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டது. அதுமாத்திரமின்றி அஹ்னாப் ஜசீமின் குடும்பத்தினரும் சட்டத்தரணிகளும் அவரை உரிய தினங்களில் அணுகுவதற்கும் தடையேற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அஹ்னாப் ஜசீமின் சட்டத்தரணிகள் அவருக்குச் சார்பாக வாதங்களை முன்வைப்பதைத் தடுக்கும் நோக்கில், அவரது குடும்பத்தார் மற்றும் சட்டத்தரணிகளுக்கு அறிவிக்காமல், அவர் கடந்த வாரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறார் என்று அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் கொழும்பு வருகை

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சயீத் பின் முபாரக்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...